மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 10,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 10,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.86 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 10,259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,86,321-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 250 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 41,965-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 13,58,606 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 1,85,270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை