RAJINI FOR CHANGE… ரஜினி ரசிகர்களின் அதிரடி போஸ்டர்..; ஓ விஷயம் இதுதானா.?

FILMI STREET  FILMI STREET
RAJINI FOR CHANGE… ரஜினி ரசிகர்களின் அதிரடி போஸ்டர்..; ஓ விஷயம் இதுதானா.?

கொரோனா ஊரடங்கில் மூடப்பட்ட தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி குறித்து ரத்து விளக்கம் கேட்டு கோர்ட்டில் முறையீட்டு இருந்தார் ரஜினிகாந்த்.

சென்னை மாநகராட்சியில் முடித்துக் கொள்ள வேண்டிய விஷயத்திற்காக கோர்ட்டை நாடியதால் நீதிபதி எச்சரிச்சை விட பின் வழக்கை வாபஸ் பெற்றார் ரஜினிகாந்த்.

அதாவது… பொதுமுடக்கம் காரணமாக திருமண மஹால் மூடியே கிடந்தது எனவும் அதனால் சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் மாநகராட்சிக்கு இதுகுறித்த விளக்கம் அளித்து நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை மாநகராட்சி தரப்பில் பதில் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

அபராதம் விதிக்க நேரிடும் என்கிற ஐகோர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு பதிலளித்தனர்.

அதன்பின்னர் ரஜினி தரப்பில் ரூ. 6.50 லட்சம் சொத்து வரியை சென்னை மாநகராட்சியில் செலுத்தினர்.

இதனையடுத்து ரஜினி் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

ராகவேந்திரா மண்டப சொத்து வரி…

நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.

தவறைத் தவிர்த்திருக்கலாம்.

#அனுபவமே_பாடம்

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஒரு வால் போஸ்டரை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர். அதில்…

RAJINI FOR CHANGE ரஜினி பார் சேஞ்ச் என வசனம் இடம்பெற்ற போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.

Rajini for change posters seen across chennai

மூலக்கதை