டெக்ஸாஸ் பல்கலை., கொரோனா தடுப்பு மருந்து ஆய்வு; நம்பிக்கை அளிக்கும் சிகிச்சை..!

தினமலர்  தினமலர்
டெக்ஸாஸ் பல்கலை., கொரோனா தடுப்பு மருந்து ஆய்வு; நம்பிக்கை அளிக்கும் சிகிச்சை..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தற்போது தடுப்பு மருந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.


இந்த ஆய்வில் இரண்டு மாலிக்யூல்களை ஒன்று சேர்த்து சிசோர்ஸ் என்னும் என்சைம் கண்டுபிடிக்கப்படுகிறது. இதற்குப் பெயர் SARS-CoV-2-PLpro. இது கொரோனா வைரஸ் உடலுக்குள் இரட்டிப்பாவதைத் தடுக்கும் வல்லமை உடையது.


இந்த ஆய்வின் முடிவுகள் 'ஜர்னல் சயின்ஸ்' இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. வைரஸ் மற்றும் புரதம் ஆகிய இரண்டும் இந்த தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பயோ கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி பேராசிரியர் சான் அன்டோனியோ கூறுகையில் சைட்டோகைனின் மற்றும் கீமோகைனின் உள்ளிட்ட மாலிகியூல்களை இந்தத் தடுப்பு மருந்து தூண்டுவதால் கொரோனா வைரஸ் எதிராக நுண்ணுயிரி அளவில் திறம்பட போராடும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தத் தடுப்பு மருந்து அங்கீகரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் அனைத்து வயதினருக்கும் ஒரே முறையில் வீரியத்தில் செயல்படாது என அவர் தெரிவித்துள்ளார். வயதுக்கு ஏற்ப இதன் திறன் மாறுபடும் என்பதால் இதனை முதலில் நோயாளிகளுக்கு செலுத்தி பார்த்து சோதனை செய்யமுடியும் என்று உள்ளார். நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த தடுப்பு மருந்து சோதனை உள்ளதால் அமெரிக்காவில் தற்போது இது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரவேற்பினை பெற்றுள்ளது.

மூலக்கதை