டிவிலியர்ஸ் அரைசதம்: பெங்களூரு வெற்றி

தினமலர்  தினமலர்
டிவிலியர்ஸ் அரைசதம்: பெங்களூரு வெற்றி

துபாய்: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் டிவிலியர்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்டிங்' செய்த ராஜஸ்தான் அணிக்கு உத்தப்பா (41), கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (57) கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது.


சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிக்கல் (35), கேப்டன் விராத் கோஹ்லி (43), டிவிலியர்ஸ் (55) கைகொடுக்க, 19.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மூலக்கதை