நியூசிலாந்து பொது தேர்தல்: ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் வெற்றி

தினமலர்  தினமலர்
நியூசிலாந்து பொது தேர்தல்: ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் வெற்றி

வெலிங்டன்:நியூசிலாந்தில் பொதுதேர்தல் இன்று நடைபெற்றது.இந்த தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி நேரடியாக எதிர்கொண்டது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டன.


அதில், பிரதமர் ஜெசிந்தாவின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 சதவிகித ஓட்டுக்களை பெற்று அபார வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி 27 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.
பார்லிமென்டில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஜெசிதாவின் ஆளும் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.


வெற்றி குறித்து ஜெசிந்தா கூறுகையில், கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டை மீண்டும் நாம் சிறப்பாக கட்டமைப்போம். கொரோனாவில் மீள்தல், செயல்களை வேகப்படுத்துதளில் நாங்கள் உறுதியாக உள்ளோம்' என்றார்.தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தேர்வாகியுள்ள ஜெசிந்தாவுக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

மூலக்கதை