பிரதமர் நவராத்திரி வாழ்த்து

தினகரன்  தினகரன்
பிரதமர் நவராத்திரி வாழ்த்து

புதுடெல்லி: நவராத்திரி விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கடவுளின் ஆசியால் நம் உலகம் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் இருக்கட்டும். ஏழை மற்றும் நலிந்தவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்கப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,’ என கூறியுள்ளார்.

மூலக்கதை