நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்கு: கோர்ட் உத்தரவு

தினமலர்  தினமலர்
நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்கு: கோர்ட் உத்தரவு

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார்


. 'டுவிட்டர்' வாயிலாக, வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வரும் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சண்டேலுக்கு எதிராக, மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்த்துறைக்கு உத்தரவிட்டது.

மூலக்கதை