உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி: நட்டா பெருமிதம்

தினமலர்  தினமலர்
உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி: நட்டா பெருமிதம்

''குடும்பத்தையே கட்சியாக மாற்றி நடத்துகிறவர்கள் மத்தியில், கட்சியே ஒரு குடும்பமாக இயங்குகிறது என்றால், அது பா.ஜ., மட்டும் தான். பா.ஜ., தான், உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி,'' என, பாஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா கூறினார்.

'வீடியோ கான்பரன்ஸ்'உத்தரகண்ட் மாநிலத்தில், பா.ஜ., அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது. இதற்காக, டில்லியில் இருந்தபடியே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, ஜே.பி.நட்டா பேசியதாவது:கட்சி அலுவலகம், வெறும் கட்டடம் மட்டுமே என, கருதக் கூடாது; அது தொண்டர்களின் உணர்வுகளுக்கான வடிகால் அளிக்ககூடியது.

ஒரு கட்சியின் அலுவலகம், அதன் தலைவரின் வீட்டிலிருந்து இயங்குகிறது என்றால், அந்த கட்சி, அந்த தலைவரை சார்ந்ததாகவே மாறிவிடுகிறது. இந்த காட்சிகளை நாடு முழுதும், நிறைய பார்க்க முடியும்.ஒரு குடும்பம்அங்கெல்லாம், அந்த தலைவரின் குடும்பமே, கட்சியாக மாறிவிடும். நாட்டிலுள்ள எந்த கட்சியை வேண்டுமானாலும், எடுத்துக் கொள்ளுங்கள். அவை ஒவ்வொன்றுமே, ஒவ்வொரு குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டன.பா.ஜ., அப்படி அல்ல. உலகிலேயே, மிகப்பெரிய அரசியல் கட்சி என்றால், அது பா.ஜ.,தான். இந்த கட்சியில் உள்ளவர்கள் தான், ஒரு குடும்பமாக செயல்படுகின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார். -- நமது டில்லி நிருபர் -

மூலக்கதை