நியூஸி., தேர்தலில் ஜெசிந்தா வெற்றி

தினமலர்  தினமலர்
நியூஸி., தேர்தலில் ஜெசிந்தா வெற்றி

ஆக்லாந்து:நியூசிலாந்து பிரதமராக, தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஜெசிந்தா ஆர்டர்ன் வெற்றி பெற்றார்.

நியூசிலாந்து நாட்டில், நேற்று முன்தினம் பொதுத் தேர்தல் நடந்தது. இதில், தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்னின், தொழிலாளர் கட்சியும், ஜூடித் காலின்சின், தேசியவாத கட்சியும் போட்டியிட்டன.இதில், 87 சதவீத ஓட்டுக்கள் எண்ணப்பட்ட நிலையில், ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி, 48.9 சதவீத ஓட்டுக்களையும், தேசியவாத கட்சி, 27 சதவீத ஓட்டுக்களையும் பெற்றன. இதைஅடுத்து, ஜெசிந்தா ஆர்டர்ன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். நியூசிலாந்தின் பிரதமராக, இரண்டாவது முறையாக அவர் பதவி ஏற்க உள்ளார்.

மூலக்கதை