டில்லியிடம் வீழ்ந்தது சென்னை

தினமலர்  தினமலர்
டில்லியிடம் வீழ்ந்தது சென்னை

சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஷிகர் தவான் சதம் கடந்து கைகொடுக்க டில்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.


ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

சென்னை அணிக்கு டுபிளசி (58), வாட்சன் (36), அம்பதி ராயுடு (45*), ரவிந்திர ஜடேஜா (33*) கைகொடுக்க, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.


சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு ஷிகர் தவான் (101*) கைகொடுக்க, 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மூலக்கதை