மேகா மீதான மோகம் குறைந்தது!

தினமலர்  தினமலர்
மேகா மீதான மோகம் குறைந்தது!

மேகா ஆகாஷ், சினிமாவில், 'என்ட்ரி' கொடுத்தபோது, அவரது அழகை, 'ஆஹா... ஓஹோ...' என்று வர்ணித்த, 'ஹீரோ' மற்றும் இயக்குனர்களெல்லாம், அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஊத்திக்கொண்டதால், ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தி, ஓரங்கட்டி வருகின்றனர். இதனால், 'மேல்தட்டு, 'ஹீரோ'கள் தான் என் இலக்கு...' என்று, கெத்தாக பேசி வந்த, மேகா ஆகாஷ், இப்போது, அவர்கள் தன்னை கண்டாலே தலையை திருப்பிக் கொள்வதால், கடுப்பாகி, 'புது வரவு நடிகர்களுடன், 'ஹிட்' படங்களில் நடித்து, மீண்டும் உங்களை, என், 'கால்ஷீட்'டுக்காக நீண்டவரிசையில் நிற்க வைத்து காட்டுகிறேன்...' என்று, கோபத்தில் கொப்பளித்துள்ளார். வாயால் பந்தல் இடுகிறது போல்!

— எலீசா

மூலக்கதை