வருகிறார் பட்டோடி வாரிசு *டில்லி அணி அழைப்பு | அக்டோபர் 15, 2020

தினமலர்  தினமலர்
வருகிறார் பட்டோடி வாரிசு *டில்லி அணி அழைப்பு | அக்டோபர் 15, 2020

 மும்பை: பட்டோடியின் இளம் பேரன் கிரிக்கெட்டில் தடம் பதிக்க காத்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மன்சூர் அலி கான் பட்டோடி. 1961ல் இங்கிலாந்தின் ஹோவ் நகரில் நடந்த கார் விபத்தில் சிக்கி, வலது கண் பார்வையை இழந்தார். பின் ஒரு கண் பார்வையுடன் விளையாட கற்றுக் கொண்டார். இவரது துணிச்சலை பாராட்டி ‘டைகர் பட்டோடி’ என அழைக்கப்பட்டார். இந்தியாவின் இளம் டெஸ்ட் கேப்டன்(21 வயது) என்ற பெருமைக்குரியவர். 1961–75 காலக்கட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்தார்.  2011ல் 70வது வயதில் காலமானார். பட்டோடி மகனான பாலிவுட் நடிகர் சைப் அலி கான், நடிகை கரீனா கபூரை கரம் பிடித்தார்.

இவர்களது மகன் தைமுர் அலி கான், 3. தாத்தாவை போலவே கிரிக்கெட்டில் ஆர்வமாக உள்ளான். எப்போதும் பேட்டும் கையுமாக உள்ளான். இந்த அழகிய படத்தை தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட கரீனா,‘ஐ.பி.எல்., தொடரில் வாய்ப்பு கிடைக்குமா...என்னாலும் விளையாட முடியும்,’என தைமுர் கேட்பது போல ஒரு வாசகத்தையும் குறிப்பிட்டார்.இதற்கு பதில் அளித்த டில்லி அணி ‘எங்களுடன் இணைந்து தைமுர் கர்ஜிக்க விரும்புகிறோம். இவர், டில்லி அணிக்கு சொந்தமானவர்,’என தெரிவித்துள்ளது

 

மூலக்கதை