டெஸ்ட் அணியில் நவ்தீப் சைனி | அக்டோபர் 16, 2020

தினமலர்  தினமலர்
டெஸ்ட் அணியில் நவ்தீப் சைனி | அக்டோபர் 16, 2020

சார்ஜா: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நவ்தீப் சைனி சேர்க்கப்பட உள்ளார்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி 27. இதுவரை 5 ஒருநாள் (5 விக்.,), 10 ‘டுவென்டி–20’ ல் பங்கேற்றுள்ளார். பந்தை வேகமாக வீசுவதை விட ‘சுவிங்’ செய்வதில் வல்லவர். 

இவர் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லும் டெஸ்ட் அணியில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. தற்போதைய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் காயத்தால் அவதிப்படுகின்றனர். 

ஆப்பரேஷனில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யாவும் இன்னும் பந்துவீச்சை துவங்காமல் உள்ளார். இதனால் சைனியை டெஸ்ட் அணியில் இடம் சேர்க்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மூலக்கதை