இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு கொரோனா | அக்டோபர் 16, 2020

தினமலர்  தினமலர்
இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு கொரோனா | அக்டோபர் 16, 2020

மும்பை: இந்திய கிரிக்கெட் வீராங்கனை மான்ஷி ஜோஷிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

ஐக்கிய அரபு எமிரேட்சில் பெண்களுக்காக ‘டுவென்டி–20’ சாலஞ்ச் தொடர் நவ. 4–9ல் நடக்கவுள்ளது. மொத்தம் மூன்று அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகள் மும்பையில் 9 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டு, கொரோனா சோதனையில் தேறிய பின், எமிரேட்ஸ் செல்லவுள்ளனர். 

இதற்கான மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணியில் இடம் பெற்றவர் வேகப்பந்து வீச்சாளர் மான்ஷி ஜோஷி 27. இவருக்கு கொரோனா இருப்பது உறுதியாக, மும்பை செல்லவில்லை. 

இந்திய அணிக்காக 11 ஒருநாள், 8 ‘டுவென்டி–20’ போட்டியில் பங்கேற்ற மான்ஷி, தற்போது டேராடூனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவருக்குப் பதில் வெலாசிட்டி அணியில் மேக்னா சிங் 26, சேர்க்கப்பட்டார்.

 

மூலக்கதை