நம்பிக்கை முக்கியம் கோஹ்லி * டிவிலியர்ஸ் தாமதம் சரியா | அக்டோபர் 16, 2020

தினமலர்  தினமலர்
நம்பிக்கை முக்கியம் கோஹ்லி * டிவிலியர்ஸ் தாமதம் சரியா | அக்டோபர் 16, 2020

சார்ஜா: புள்ளி விபரங்கள் மீது நம்பிக்கை வைக்காமல் திறமை மீது நம்பிக்கை வைத்ததால் தான் பஞ்சாப் அணி, பெங்களூருவை  வென்றது. 

பெங்களூரு, பஞ்சாப் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி சார்ஜாவில் நடந்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி, 2வது விக்கெட்டை  இழந்த போது 6.3 ஓவரில் 62 ரன் எடுத்திருந்தது. அடுத்து முந்தைய போட்டியில் இதே மைதானத்தில் 33 பந்தில் 73 ரன் எடுத்த  டிவிலியர்ஸ் தான் வருவார் என எல்லோரும் நம்பினர். மாறாக வாஷிங்டன் சுந்தர் (14 பந்தில் 13 ரன்), அடுத்து துபே (19 பந்தில் 23 ரன்)  வந்தனர். இருவரும் 33 பந்தில் 36 ரன் எடுத்தனர்.

பின் டிவிலியர்ஸ் (5 பந்தில் 2 ரன்) வந்த போது 24 பந்துகள் தான் மீதமிருந்தன. ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் இவர் விரைவில்  அவுட்டானார். இதற்கு கோஹ்லி, ‘பஞ்சாப் அணியில் இரண்டு ‘லெக் ஸ்பின்னர்’ இருந்ததால், வலது, இடது பேட்ஸ்மேன் அடிப்படையில்  சுந்தர், துபே முன்னதாக களமிறக்கினோம்,’ என, புள்ளி விபரங்களை கூறினார்.

ஏனெனில் 2017 க்குப் பின் டிவிலியர்ஸ், சந்தித்த ‘கூக்ளி’ வகையிலான 56 சுழற் பந்தில், 55 ரன் மட்டும் எடுத்து, 7 முறை  அவுட்டாகியுள்ளார். 

பஞ்சாப் நம்பிக்கை

மறுபக்கம், பஞ்சாப் ‘சேஸ்’ செய்த போது 8 ஓவரில் 78 ரன் எடுத்த போது மயங்க் அவுட்டானார். உடனே கெய்ல் களமிறங்கினார். அடுத்த  3 ஓவரில் பஞ்சாப் 4, 2, 4 ரன்கள் தான் எடுத்தது. இதில் கெய்ல் 12 பந்தில் 4 ரன் எடுத்திருந்தார்.

இருப்பினும் இவர் எப்படியும் அடித்து விடுவார் என ராகுல் நம்பினார். கடைசியில் கெய்ல் 45 பந்தில் 53 ரன்கள் விளாச, பஞ்சாப் வெற்றி  எளிதானது. இப்படி திறமை மீது நம்பிக்கை வைத்ததால் தான், கெய்லை முன்னதாக களமிறக்கிய பஞ்சாப், புள்ளி விபரங்களை மட்டும்  நம்பிய கோஹ்லி அணியை வீழ்த்தியது.

மூலக்கதை