லண்டன் பறந்தார் பீட்டர்சன் | அக்டோபர் 16, 2020

தினமலர்  தினமலர்
லண்டன் பறந்தார் பீட்டர்சன் | அக்டோபர் 16, 2020

துபாய்: இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் 40. இவர், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கும் 13வது ஐ.பி.எல்., சீசனுக்கான வர்ணனையாளர் குழுவில் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் சார்ஜாவில் நடந்த பஞ்சாப்–பெங்களூரு அணிகள் மோதிய போட்டிக்கு வர்ணனை செய்திருந்தார். இந்நிலையில் இவர், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதற்காக துபாயில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். இவருக்கு பாடகி ஜெசிகா டெய்லர் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இதுகுறித்த வீடியோ ஒன்றை பீட்டர்சன் தனது ‘டுவிட்டரில்’ பதிவிட்டுள்ளார். இதில் ‘‘இந்த ஆண்டு மிகவும் விசித்திரமானது. எனது குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நான் அவர்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். இதனால் ஐ.பி.எல்., வர்ணனையாளர் குழுவில் இருந்து பாதியில் விலகுகிறேன்,’’ என, தெரிவித்திருந்தார்.

மூலக்கதை