மும்பை அணி கலக்கல் வெற்றி: குயின்டன் அரைசதம் விளாசல் | அக்டோபர் 16, 2020

தினமலர்  தினமலர்
மும்பை அணி கலக்கல் வெற்றி: குயின்டன் அரைசதம் விளாசல் | அக்டோபர் 16, 2020

அபுதாபி: மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கம்மின்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க கோல்கட்டா அணி 20 ஓவரில் 148 ரன்கள் எடுத்தது.

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதின. கோல்கட்டா அணியில் டாம் பான்டன், நாகர்கோட்டி நீக்கப்பட்டு கிறிஸ் கிரீன், ஷிவம் மாவி சேர்க்கப்பட்டனர். மும்பை அணியில் ஜேம்ஸ் பட்டின்சனுக்கு பதிலாக நாதன் கூல்டர்–நைல் தேர்வானார். ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா அணி கேப்டன் மார்கன் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

கார்த்திக் ஏமாற்றம்: கோல்கட்டா அணிக்கு ராகுல் திரிபாதி, சுப்மன் கில் ஜோடி துவக்கம் தந்தது. பவுல்ட் ‘வேகத்தில்’ திரிபாதி (7) வெளியேறினார். நாதன் கூல்டர்–நைல் பந்தில் நிதிஷ் ராணா (5) அவுட்டானார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த சுப்மன் கில் (21) பெரிய அளவில் சோபிக்கவில்லை. ராகுல் சகார் ‘சுழலில்’ தினேஷ் கார்த்திக் (4) போல்டானார். குர்னால் பாண்ட்யா பந்தில் ஒரு சிக்சர் விளாசிய ஆன்ட்ரி ரசல் (12) நிலைக்கவில்லை.

 

கம்மின்ஸ் கலக்கல்: பின் இணைந்த கேப்டன் இயான் மார்கன், பாட் கம்மின்ஸ் ஜோடி மும்பை அணி பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்த்தது. கூல்டர்–நைல் வீசிய 13வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த கம்மின்ஸ், பவுல்ட் வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். கூல்டர்–நைல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கம்மின்ஸ், 35 பந்தில் அரைசதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மார்கன், கூல்டர்–நைல் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார்.

கோல்கட்டா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. மார்கன் (39), கம்மின்ஸ் (53) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கம்மின்ஸ் வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ஹர்திக் பாண்ட்யா, கிறிஸ் கிரீன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.

மும்பை அணி 16.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குயின்டன் (78), ஹர்திக் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை