பாண்ட்யா வருத்தம் | அக்டோபர் 17, 2020

தினமலர்  தினமலர்
பாண்ட்யா வருத்தம் | அக்டோபர் 17, 2020

அபுதாபி: மகனுக்கு ‘டயாப்பர்’ மாற்றி விட முடியாத வருத்தத்தில் உள்ளார் பாண்ட்யா.

மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா. இவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச். இந்த தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் மகன் அகஸ்தியா பிறந்தான். தற்போது ஐ.பி.எல்., தொடருக்காக பாண்ட்யா மட்டும் எமிரேட்ஸ் சென்றுள்ளார். 

கொரோனா காரணமாக உயர்மட்ட பாதுகாப்பில் இருப்பதால் வேறு இடங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது. இது குறித்து வர்ணனையாளர் டேனி மோரிசன், பாண்ட்யாவிடம்,‘பார்ட்டிகளுக்கு செல்ல முடியாதது வருத்தமாக உள்ளதா, என கேட்டார்.

இதற்கு பாண்ட்யா கூறுகையில்,‘‘நான் இப்போது அப்பா ஆகி விட்டேன். ஆகையால் பார்ட்டிகளுக்கு செல்ல முடியாதது குறித்து வருத்தப்படுவது இல்லை. எனது மகனுக்கு ‘டயாப்பர்’ மாற்ற விட அருகில் இல்லை என்று நினைக்கும் போது தான் வருத்தமாக உள்ளது,’’ என்றார்.

மூலக்கதை