யாருமே செய்யாத தப்பை நான் செய்யல..; குடி போதையில் கார் ஓட்டி ஓவராக பேசிய நடிகை

FILMI STREET  FILMI STREET
யாருமே செய்யாத தப்பை நான் செய்யல..; குடி போதையில் கார் ஓட்டி ஓவராக பேசிய நடிகை

வழக்கம்போல சென்னையில் வாகன சோதனையில் போக்குவரத்து போலீசார் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.

அப்போது கோடம்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற கார்களை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது ஒரு காரில் ஓட்டுனர் இருக்கையில் இருந்த பெண் குடிபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.

அவர் கர்நாடகவை சேர்ந்த நடிகை வம்ஷிகா என்பதும் தெரியவந்தது.

நடிகை வம்ஷிகா குடிபோதையில் இருப்பது உறுதியானது.

எனவே அவர் மீது பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதன் பின்னர் விசாரணைக்காக பாண்டி பஜார் காவல்நிலையம் வந்த வம்ஷிகா செய்தியாளர்களிடம் பேசினார்.

” தான் மது அருந்திருந்ததாகவும் ஆனால் சுய நினைவோடுதான் கார் ஓட்டி இருந்ததாக தெரிவித்தார்.

மது அருந்துவிட்டு கார் ஓட்டுவது தப்புதான்.

ஆனால் யாரும் செய்யாத தப்பை தான் செய்யவில்லை என விளக்கம் வேற அளித்துள்ளார்.

அதன்பின்னர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக காவல்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர் எனவும் நடிகை வம்ஷிகா தெரிவித்தார்.

Kannada actress Vamshika caught red handed in drunk and drive

மூலக்கதை