21 ஆண்டுகளுக்கு பின் மோகன்லாலுடன் இணையும் சந்தோஷ் சிவன்

தினமலர்  தினமலர்
21 ஆண்டுகளுக்கு பின் மோகன்லாலுடன் இணையும் சந்தோஷ் சிவன்

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன், இயக்குனராகவும் மாறிவிட்டதால் குறைந்த அளவிலான படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்து வருகிறார். கடந்த வருடம் முழுவதும் தர்பார் படத்தில் பணியாற்றிய சந்தோஷ் சிவன், அதேசமயம் மலையாளத்தில் ஜாக் அண்ட் ஜில் என்கிற படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் தற்போது மோகன்லால் இயக்குனராக அறிமுகமாகும் பாரோஸ் என்கிற படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் கேயு.மோகனன் (மாளவிகா மோகனன் தந்தை) ஒளிப்பதிவு செய்வார் என சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் சந்தோஷ் சிவன், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடைசியாக 1999ல் மோகன்லால் நடித்த வானப்பிரஸ்தம் என்கிற படத்தில் பணியாற்றியிருந்தார் சந்தோஷ் சிவன். அந்தவகையில் 21ஆண்டுகள் கழித்து மீண்டும் மோகன்லால் இயக்குனராக படத்தில் அவருடன் இணைகிறார் சந்தோஷ் சிவன். இந்தபடம் 3டியில் உருவாக இருப்பதால் சந்தோஷ் சிவனின் பங்கு இதில் முக்கியமானதாக இருக்கும்.

மூலக்கதை