அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தீ விபத்து

தினமலர்  தினமலர்
அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தீ விபத்து

தெலுங்கு திரையுலகில் மிக முக்கியமான ஸ்டூடியோக்களில் ஒன்று ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸ். நேற்று இந்த ஸ்டுடியோவின் ஒரு பகுதியில் திடீரென எதிர்பாராதவிதமாக மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஆனாலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஸ்டுடியோவில் பணியாற்றிய ஊழியர்களின் தீவிர முயற்சியால் தீ உடனே அணைக்கப்பட்டு பெரிய அளவில் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே இந்த தீ விபத்து செய்தி பெரிய அளவில் சோசியல் மீடியாவில் பரவியது.

அதற்கு காரணம் தீ விபத்து நடந்த பகுதிக்கு சற்று அருகில் தான், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வரும் பிக்பாஸ் வீடு அமைந்துள்ளது. இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டிற்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்கிற ரீதியில் செய்திகள் வெளியாக துவங்கின.

இதனைத் தொடர்ந்து அந்த அன்னபூர்ணா ஸ்டூடியோ நிர்வாகத்திலிருந்து, “தீ விபத்தில் சிறிய அளவிலே தான் சேதம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி எந்த உயிர்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.. அதனால் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்” என ஒரு அறிவிப்பு வெளியானது.

மூலக்கதை