நடிகை தாக்கப்பட்ட வழக்கு : வேறு நீதிமன்ற அமர்வுக்கு மாற்ற கோரிக்கை

தினமலர்  தினமலர்
நடிகை தாக்கப்பட்ட வழக்கு : வேறு நீதிமன்ற அமர்வுக்கு மாற்ற கோரிக்கை

கடந்த 2017ல் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பிரபல மலையாள நடிகர் திலீப் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து, தற்போது ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த வழக்கு குறித்து அவ்வப்போது சாட்சிகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்து வந்தாலும், வழக்கில் இன்னும் பெரிய அளவில் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட நடிகையின் வழக்கறிஞர் சுரேஷன் என்பவர், இந்த வழக்கு ஒருதலை பட்சமாக விசாரிக்கப்படுவதாகவும், வேறு ஒரு நீதிமன்ற அவர் அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்றும், ஒரு பெண் நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மூலக்கதை