ஐபிஎல்: ராஜஸ்தான் அணி 177 ரன்கள் குவிப்பு

தினமலர்  தினமலர்
ஐபிஎல்: ராஜஸ்தான் அணி 177 ரன்கள் குவிப்பு

துபாய்: ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில்,பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் ராஜஸ்தான் அணி 177 ரன்கள் குவித்தது.

துபாயில் இன்று நடக்கும் லீக் போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், ஸ்டீவ் ஸ்மீத் வழிநடத்தும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. பெங்களூரு அணி 8 போட்டியில், 5 வெற்றி, 3 தோல்வியை பெற்றது. ராஜஸ்தான் அணி 8 போட்டியில், 3 வெற்றி, 5 தோல்வியை பதிவு செய்துள்ளது.


இன்று நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய உத்தப்பா (41), பென் ஸ்டோக்ஸ் (15) ஓரளவு நல்ல துவக்கம் தந்தனர். அடுத்தடுத்து விக்கெட் விழவே, சற்று தடுமாறிய அணியை, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தாங்கிப்பிடித்தார். இதற்கிடையே சாம்சன் (9), பட்லர் (24) , ஆர்ச்சர் (2) அவுட் ஆகினர்.

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்த நிலையில், 57 ரன்னில் அவுட்டானார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 178 ரன்கள் வெற்றி இலக்காக பெங்களூரு அணி களம் இறங்கியது.

மூலக்கதை