லோ கட் ஜாக்கெட் அணிந்த பின்லாந்து பிரதமர்: பெண்கள் ஆதரவு

தினமலர்  தினமலர்
லோ கட் ஜாக்கெட் அணிந்த பின்லாந்து பிரதமர்: பெண்கள் ஆதரவு

ஹெல்சிங்கி : லோ கட் ஜாக்கெட் அணிந்த பின்லாந்து பிரதமர் சன்னா மரீனுக்கு, அங்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், ஏராளமான பெண்கள் அவருக்கு ஆதரவாக லோகட் ஜாக்கெட்அணிந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

பின்லாந்தின் பிரதமராக, சன்னா மரீன்(34) பதவி வகித்து வருகிறார். உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பேஷன் இதழ் ஒன்றுக்கு லோ கட் ஜாக்கெட் அணிந்தபடி போஸ் கொடுத்தார். இதனை கண்டதும், சமூக வலைதளங்களில் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உயரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி செய்வது சரியல்ல என தெரிவித்தனர். அதில் ஒரு சிலர், பதவிக்கான பெருமையை கெடுத்து விட்டதாகவும், அவர் பிரதமரா அல்லது மாடலா எனவும் கேள்வி எழுப்ப துவங்கினர். சர்வதேச அரசியலிலும், பொதுமக்களிலும் மரீன் நம்பிக்கையையும், செல்வாக்கையும் இழப்பதாக விமர்சனம் எழுந்தது.

இது பின்லாந்தில் ஏராளமான பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் சன்னா மரீனுக்கு தங்களது ஆதரவை காட்டும் வகையில், லோ கட் ஜாக்கெட் உடையணிந்த படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதற்காக சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்ட #ISupportSannaMarin and #ImWithSanna ஹேஷ்டேக்குகள் அங்கு டிரெண்டிங்கில் இருந்தன

மூலக்கதை