அதிமுக 49வது ஆண்டு விழா: சென்னை கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டம்: ஓ.பன்னீர்செல்வம் கட்சி கொடி ஏற்றினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிமுக 49வது ஆண்டு விழா: சென்னை கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டம்: ஓ.பன்னீர்செல்வம் கட்சி கொடி ஏற்றினார்

சென்னை: அதிமுகவின் 49வது ஆண்டு விழா, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10. 30 மணிக்கு அதிமுகவின் 49வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்த விழாவில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

49வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 49வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தின் முகப்பில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு, அதிமுக கொடி தோரணங்கள், குருத்தோலைகள் அழகுற கட்டப்பட்டு, மேள தாளங்கள் முழங்க விழாக்கோலம் பூண்டிருந்தது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த 12ம் தேதி காலமானார்.

இதையொட்டி முதல்வர் கடந்த 5 நாட்களாக சேலம் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் தங்கி இருக்கிறார்.

அவர் இன்று காலை சேலம் மாவட்டம் இடைப்பாடி சிலுவம்பாளையத்தில் அதிமுக கட்சியை கொடியை ஏற்றி வைத்தார்.

.

மூலக்கதை