அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வரலாறு காணாத காட்டுத்தீ

தினமலர்  தினமலர்
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வரலாறு காணாத காட்டுத்தீ

டென்வர்: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பரவி வரும் காட்டுத்தீ வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தி உள்ளது.

அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் வனப்பகுதிகளில் கடந்த ஆகஸ்டில் ஏற்பட்ட காட்டுத்தீ இதுவரை சுமார் 1 லட்சத்து 67 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான காடுகளை அழித்துள்ளது.

வேகமாக பரவிய காட்டுத்தீ அப்பகுதியில் வசித்து வந்த மலைவாழ் சமூகத்தினர் உட்பட ஆயிரக்கணக்கானோரின் வீடுகளை துவம்சம் செய்துள்ளது. மணிக்கு 90 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றும் காய்ந்த வனப்பகுதிகளும் தீ வேகமாக பரவுவுதற்கு காரணமாகி உள்ளது.

இதுவரை 56 சதவீதம் மட்டுமே காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காட்டுத்தீயின் காரணமாக அம்மாகாணத்தில் உயிர்ச் சேதம் பற்றி தகவல்கள் எதுவும் இல்லை.

மூலக்கதை