மும்பை அணி கலக்கல் வெற்றி

தினமலர்  தினமலர்
மும்பை அணி கலக்கல் வெற்றி

அபுதாபி: கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் குயின்டன் டி காக் அரைசதம் கடந்து கைகொடுக்க மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் மார்கன் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
கோல்கட்டா அணிக்கு கம்மின்ஸ் (53), கேப்டன் மார்கன் (39) கைகொடுக்க, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் ராகுல் சகார் 2 விக்கெட் கைப்பற்றினார்.



எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (78), கேப்டன் ரோகித் சர்மா (35), ஹர்திக் பாண்ட்யா (21) கைகொடுக்க, 16.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூலக்கதை