ஒப்பந்தத்தை நீட்டிக்க புடின் விருப்பம்; ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்குமா அமெரிக்கா?

தினமலர்  தினமலர்
ஒப்பந்தத்தை நீட்டிக்க புடின் விருப்பம்; ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்குமா அமெரிக்கா?

கடந்த 2010ஆம் ஆண்டு ரஷ்யாவும் அமெரிக்காவும் ஒரு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் இட்டனர். இந்த ஒப்பந்தத்தின் பெயர் நியூ ஸ்டார்ட் டிரீட்டி.


இதனை அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபராக இருந்த டிமிட்ரி மெட்வெடெவ் ஆகியோர் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டனர்.

உலக சமாதானம் கருதி ஆயுதக் கட்டுப்பாடு ஏற்படுத்த இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தை இட்டன. வரும் 2021 பிப்ரவரி மாதம் இந்த ஒப்பந்தம் காலாவதி ஆகிறது. இதனை இன்னும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க தற்போதைய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரும்புகிறார்.

ஆனால் இதற்கு அமெரிக்கா சம்மதிக்குமா என்று தெரியவில்லை. வரும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் வரவுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கனரக ஆயுதங்கள் பயன்பாடு, அணு ஆயுத சோதனை உள்ளிட்ட அபாயகரமான விஷயங்களை உலக அளவில் அதிகமாக மேற்கொள்ளும் நாடுகளில் முக்கியமானவை அமெரிக்காவும் ரஷ்யாவும்மே என்பது அனைவருக்கும் தெரியும்.


இந்த இரு நாடுகளும் இதுபோன்ற ஆயுதங்கள் தயாரிப்பதை குறைத்துக்கொள்வது உலக சமாதானத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. ஆனால் வடகொரியா சீனா உள்ளிட்ட நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்க டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க சம்மதிக்க மாட்டார் என ஒரு சாரார் கூறுகின்றனர். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

மூலக்கதை