எல்.டி.சி., சலுகையை முதலீடாக மாற்றலாம்

தினமலர்  தினமலர்
எல்.டி.சி., சலுகையை முதலீடாக மாற்றலாம்

மதுரை:‘‘கொரோனா சூழலில், அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கும், எல்.டி.சி., எனும் விடுமுறை பயணப் படி சலுகையை பயன்படுத்த முடியாதவர்கள், அதை முதலீடாக மாற்றலாம்,’’ என்கிறார் பொருளாதார நிபுணர் ஷியாம் சேகர்.

அவர் கூறியதாவது: அரசு ஊழியர்கள் அனைவருக்கும், எல்.டி.சி., சலுகை உண்டு. எல்.டி.சி.,யில் அரசு போக்குவரத்தை பயன்படுத்த அனுமதி தருவர். அரசு போக்குவரத்து இல்லாத ஊர்களுக்கு 100 கி.மீ., வரை வேறு போக்குவரத்தில் பயணிக்கலாம்.பயணம் செய்திருந்தால், பயணச் சீட்டு அடிப்படையில் பயணச் செலவை அரசு வழங்கும். இச்சலுகை இதுவரை பயணத்திற்காக மட்டும் பயன்பட்டது.


கொரோனா சூழலால் இந்தாண்டு இச்சலுகைக்கு உரிய பணத்தை பயனாளர்களுக்கு அரசு வழங்குகிறது. இதனால் இச்சலுகையை வேறு வகையில் பயன்படுத்தலாம். பண்டிகை காலம் வருவதால் அதற்கு இப்பணத்தை செலவிடலாம். குடும்ப உறுப்பினர்கள், சிறிய அளவில் செய்ய விரும்பும் தொழிலுக்கு தேவையான சாதனங்கள் வாங்கி கொடுக்கலாம்.


வீட்டு உபயோக பொருட்கள் வாங்கலாம். மார்ச், 31க்குள் விடுப்பு சரண்டர், எல்.டி.சி., பணத்தை குறிப்பிட்ட அளவு செலவிட்டால், வருமான வரி விலக்கு கிடைக்கும். ஜி.எஸ்.டி., உள்ள எந்த பொருட்களையும் வாங்கி பயன்பெறலாம் என்றார்.

மூலக்கதை