போலீஸ்காரரை அடித்த வழக்கில் பெண் அமைச்சருக்கு 3 மாதம் சிறை: மகாராஷ்டிராவில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
போலீஸ்காரரை அடித்த வழக்கில் பெண் அமைச்சருக்கு 3 மாதம் சிறை: மகாராஷ்டிராவில் பரபரப்பு

அமராவதி: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி நடைெபறுகிறது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யஷோமதி தாக்கூர், கடந்த 2012 மார்ச் 24ம் தேதி அமராவதி மாவட்டத்தின் ராஜபேத் காவல் நிலையப் பகுதியில் ஒரு வழிபாதையில் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.

வாகனத்தை எடுக்கும்படி கூறிய போக்குவரத்து போலீசாரிடம், யஷோமதி தாக்கூரின் கார் டிரைவர் தகராறு செய்துள்ளார். அப்போது யஷோமதி தாக்கூர், போலீஸ்காரர் ஒருவரை அடித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக யஷோமதி தாக்கூர் மற்றும் அவரது கார் ஓட்டுனர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நீதிபதி ேஜாஷி தீர்ப்பு அளித்தார்.

‘தற்போது மாநில அமைச்சராக உள்ள யஷோமதி தாக்கூர் மற்றும் 3 பேர், போலீஸ்காரரை தாக்கிய குற்றத்திற்காக குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மூன்று மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 15,500 அபராதமும் விதிக்கப்படுகிறது.

அபராத தொகையை செலுத்தாவிட்டால், அவர்கள் மேலும் ஒரு மாதத்திற்கு கூடுதலாக சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்’ என்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.
அமைச்சருக்கு எதிராக 3 மாதம் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதால், அவர் உடனடியாக உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு, மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை