‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தில் கபில்தேவ் முதலீடு

தினமலர்  தினமலர்
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தில் கபில்தேவ் முதலீடு

மும்பை:முன்­னாள் கிரிக்­கெட் வீரர் கபில்­தேவ், ‘ஹார்­மோ­னி­ஸர் இந்­தியா’ நிறு­வ­னத்­தில் முத­லீட்டை மேற்­கொண்­டி­ருக்­கி­றார்.மின்­சா­ரத் துறை சார்ந்த தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான, ஹார்­மோ­னி­ஸர் இந்­தியா நிறு­வ­னத்­தில், கபில்­தேவ் எவ்­வ­ளவு ரூபாய் முத­லீட்டை மேற்­கொண்­டு­இருக்­கி­றார் என்­பது அறி­விக்­கப்
­ப­ட­வில்லை.

உல­க­கோப்பை நாய­க­னான கபில்­தேவ், கடந்த 2015ம் ஆண்­டி­லி­ருந்தே, ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில் முத­லீ­டு­களை மேற்­கொண்டு வரு­கி­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.குரோ­சர் பீப்­பிள்­ஈஸி டாட் காம், சம்கோ வெஞ்­சர்ஸ், விஸ்­க­வுன்­சல், வூ உள்­ளிட்ட பல ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களில் மூத­லீ­டு­களை அவர் மேற்­கொண்­டி­ருக்­கி­றார்.


இதன் தொடர்ச்­சி­யாக இப்­போது, ஹார்­மோ­னி­ஸர் இந்­தியா நிறு­வ­னத்­தி­லும் முத­லீட்டை மேற்­கொண்­டி­ருக்­கி­றார்.கிட்­டத்­தட்ட, 14 காப்­பு­ரி­மை­களை பெற்ற மிகச் சிறந்த இந்­திய தொழில்­நுட்ப வல்­லு­னர்­களை ஆத­ரிக்­கும் வகை­யில், ஹார்­மோ­னி­ஸர் இந்­தியா நிறு­வ­னத்­தில் முத­லீட்டை மேற்­கொண்­டி­ருப்­ப­தாக, கபில்­தேவ் தெரி­வித்­து உள்­ளார்.

மூலக்கதை