இதுவரை இல்லாத வகையில் சைக்கிள் விற்பனை அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
இதுவரை இல்லாத வகையில் சைக்கிள் விற்பனை அதிகரிப்பு

ஜெய்ப்­பூர்: கொரோனா பர­வல் கார­ண­மாக, கடந்த, 5 மாதங்­களில், சைக்­கிள் விற்­பனை இரு மடங்கு அதி­க­ரித்­துள்­ளது.கொரோனா காலத்­தில், மக்­கள் பொது போக்­கு­வ­ரத்தை தவிர்க்­கும் வகை­யி­லும், சகா­ய­மா­ன­தாக இருக்­கிறது என்­ப­தா­லும், சைக்­கிளை பயன்­ப­டுத்­து­வது அதி­க­ரித்­துள்­ளது.



இதன் கார­ண­மாக, கடந்த, 5 மாதங்­களில், சைக்­கிள் விற்­பனை இரு மடங்கு அதி­க­ரித்­துள்­ளது. பல நக­ரங்­களில், மக்­கள் அவர்­கள் விருப்­பத்­திற்­கேற்ற சைக்­கிளை வாங்­கு­வ­தற்­காக
காத்­தி­ருப்­ப­தாக தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள்தெரி­விக்­கின்றன. இது போன்ற நிலை, நாட்­டில் முதன் முறை­யாக உரு­வாகி இருப்­ப­தா­க­வும் அவை தெரி­விக்­கின்றன.

கடந்த மே முதல் செப்­டம்­பர் வரை­யி­லான, 5 மாத காலத்­தில், விற்­பனை மொத்­தம்,
41.81 லட்­ச­மாக உயர்ந்­தி­ருப்­ப­தாக அகில இந்­திய சைக்­கிள் தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கம்
தெரி­வித்­துள்­ளது.கடந்த மே மாதத்­தில், சைக்­கிள் விற்­பனை, 4.57 லட்­ச­மாக இருந்த நிலை­யில், ஜூன் மாதத்­தில், இரு மடங்கு உயர்ந்து, 8.51 லட்­ச­மாக அதி­க­ரித்­தது. செப்­டம்­பர் மாதத்­தில் மட்­டும், 11.22 லட்­சம் சைக்­கிள்­கள் விற்­பனை ஆகி­யி­ருக்­கின்றன.

இந்த விற்­பனை அதி­க­ரிப்பு குறித்து, சங்­கத்­தின் பொதுச் செய­லர் கே.பி. தாக்­கூர்
கூறி­ய­தா­வது:கடந்த, 5 மாதங்­களில், சைக்­கிள் விற்­பனை கிட்­டத்­தட்ட, 100 சத­வீ­தம் அள­வுக்கு அதி­க­ரித்­துள்­ளது. பல இடங்­களில் மக்­கள் முன்­ப­திவு செய்துகாத்­தி­ருக்­கி­றார்­கள்.அனே­க­மாக இந்த அள­வுக்கு தேவை அதி­க­ரித்­தி­ருப்­பது, வர­லாற்­றில் முதல் முறை­யாக இருக்­கக்­கூ­டும். கொரோனா காலத்­தில், பிற பொது மற்­றும் சொந்த வாக­னங்­களை விட, தனி­ம­னித இடை ­வெ­ளியை பாது­காக்க, சைக்­கிள் தான் சிறந்த வாக­ன­மாக மக்­கள் கரு­து­கி­றார்­கள். இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

மூலக்கதை