174 நாட்களுக்கு பிறகு ஆம்னி பஸ்கள் சேவை நாளை தொடங்குகிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
174 நாட்களுக்கு பிறகு ஆம்னி பஸ்கள் சேவை நாளை தொடங்குகிறது

சென்னை: கடந்த 174 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ் சேவை நாளை முதல் மீண்டும் துவங்குவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழக அரசு மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்தை அனுமதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து அரசு பஸ்கள் இயக்க துவங்கின. ஆனால், தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான 2 காலாண்டு (ஆறு மாதம்) சாலை வரியை பேருந்துகளை இயக்காத காலங்களுக்கு முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஆம்னி பேருந்துகளில் 100% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க பிற மாநிலங்களைப் போல்  தமிழக அரசும் அனுமதிக்க வேண்டும்.

குளிர்சாதன வசதி உள்ள ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆம்னி பஸ்கள் இயங்காது என அதன் உரிமையாளர்கள் அறிவித்தனர். அதன்படி ஆம்னி பஸ்கள் இயங்கவில்லை.

இந்நிலையில் 174 நாட்களுக்கு பிறகு நாளை (அக்.

16ம் தேதி)   முதல் தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

.

மூலக்கதை