கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராக்கெட் ஏவும் பணிகள் விரைவில் தொடங்கும்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராக்கெட் ஏவும் பணிகள் விரைவில் தொடங்கும்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

திருவனந்தபுரம்: கொரோனா பரவலை தொடர்ந்து விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் பணிகளை கடந்த பல மாதங்களாக இஸ்ரோ நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மாநாட்டையொட்டி பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆய்வு மைய தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன், இஸ்ேரா தலைவர் டாக்டர் சிவன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியது: கொரோனா பரவலை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராக்கெட் ஏவும் பணிகள் விரைவில் மீண்டும் தொடங்கும். பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டில் ரிசாட்-2 பிஆர்-2 செயற்கைக்கோள் அடுத்த மாதம் முதல்வாரத்தில் ஏவப்படும்.

இத்துடன் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் ஏவப்படும்.

2022 ஆகஸ்டில் விண்வெளிக்கு மனிதர்களை கொண்டு செல்லும் ககன்யான் திட்டத்தில் சற்று தாமதம் ஏற்படலாம். இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த திட்டத்துக்கு ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் உதவுகின்றன. விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக 59 நாடுகளுடன் 250 ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நானோ செயற்கைக் கோள்கள் தயாரிக்க 23 நாடுகளை சேர்ந்த 60 பேருக்கு ஐஎஸ்ஆர்ஓ பயிற்சி அளித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை