கேரள தங்க கடத்தல் வழக்கு: தங்கராணி சொப்னாவுக்கு வாக்குமூலம் நகல் தர மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரள தங்க கடத்தல் வழக்கு: தங்கராணி சொப்னாவுக்கு வாக்குமூலம் நகல் தர மறுப்பு

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் சொப்னா மீது சுங்க இலாகா வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. அவரை காவலில் எடுத்தும், சிறையில் வைத்தும் பலமுறை சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் சொப்னா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தன்னை கட்டாயப்படுத்தி சுங்க இலாகா வாக்குமூலம் பெற்றதாகவும், வாக்குமூலத்தின் நகலை தனக்கு வழங்க வேண்டும் என்றும், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சொப்னா மனுதாக்கல் செய்தார்.

மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.



இதுதொடர்பாக விளக்கம் அளிக்க சுங்க இலாகாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சொந்த வாக்குமூலத்தின் நகலை சொப்னா கேட்பது சட்டப்படி செல்லாது. இந்திய குற்றவியல் சட்டப்படி வாக்குமூலத்தை தர வேண்டும் என்று கூற அதிகாரம் கிடையாது.

உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக உத்தரவும் பிறப்பித்துள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில், தங்கம் கடத்தலில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது.

அவர்கள் வெளிநாடுகளில் பொதுவாழ்வில் முக்கிய பங்கு வகிப்பர்களாக உள்ளனர். அதிகார வலிமை பெற்ற விஐபிகளான அவர்களை நாங்கள் நெருங்கி வருகிறோம்.

இந்த நேரத்தில் ெசாப்னாவின் வாக்குமூலத்தை நாங்கள் வெளியிட்டால் அவர்கள் அனைவரும் தப்பிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வாக்குமூலத்தை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலருக்கும் பங்கு: தங்கம் கடத்தலில் கைதான ரமீஸ், சொப்னாவுக்கு கடைசியாக ₹97 லட்சம் கமிஷனாக கொடுத்துள்ளார்.

கடைசியாக 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இது அதற்கு முன்பு கடத்தப்பட்ட தங்கத்துக்கான கமிஷனாகும்.

இதில் பெருந்தொகையை சொப்னா கேரள உயரதிகாரிகள் பலருக்கும் பங்குபோட்டு கொடுத்துள்ளார்.

.

மூலக்கதை