தங்கம் கடத்தல் வழக்கில் திருப்பம் சொப்னாவுக்கு ரூ. 4 கோடி கமிஷன்: அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தங்கம் கடத்தல் வழக்கில் திருப்பம் சொப்னாவுக்கு ரூ. 4 கோடி கமிஷன்: அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள தங்கராணி சொப்னாவுக்கு கமிஷன் மற்றும் நன்கொடையாக மட்டும் ரூ. 4 கோடி கிடைத்துள்ளதாக மத்திய அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவனந்தபுரம் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வழக்கில் கைதாகி உள்ள தங்கராணி சொப்னா குறித்து நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்ஐஏ, சுங்க இலாகா, மத்திய அமலாக்கத்துறை ஆகிய 3 விசாரணை அமைப்புகளும் சொப்னாவிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தியது.அமலாக்கத்துறை அதிகாரிகள் சொப்னாவிடம் நடத்திய விசாரணை குறித்த தகவல்கள் தற்போது கசிந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு: சொப்னா தான் செய்து தருவதாக கூறும் அனைத்து வேலைகளுக்கும் கமிஷன் வாங்கி வந்துள்ளார்.

துபாயில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள அனாதை இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளுக்கு கொடுப்பதற்கு என்று சுமார் 17 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக  துபாய் நிறுவனத்திடம் இருந்தும், கேரளாவில் இறக்குமதி செய்த நிறுவனத்திடம் இருந்தும் கமிஷன் வாங்கியது தெரிய வந்துள்ளது.

இதேபோல் திருவனந்தபுரத்தில் விமான நிலையத்தில் விசா ஸ்டாம்பிங் செய்வதற்காக 4 தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

அந்த நிறுவனங்களிடம் இருந்தும் லட்சக்கணக்கில் கமிஷன் பெற்றுள்ளார். மேலும் லைப்மிஷன் என்ற திட்டத்தின் மூலம் கேரள அரசு ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கிறது.

இந்த திட்டத்தின் ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்தும் கோடி கணக்கான ரூபாய் கமிஷனாக பெற்றுள்ளார்.

கேரளாவில் பல்வேறு வேலைகளை செய்து கொடுக்க சொப்னா கமிஷனாக மட்டுமே ரூ. 4 கோடிக்கு மேல் சம்பாதித்து இருப்பது தெரியவந்து உள்ளது.

இதுதவிர தங்கம் கடத்தல் மூலமும் பல கோடி ரூபாய் கமிஷன் கிடைத்து இருக்கிறது. ஆனால் எவ்வளவு பணம் கிடைத்துள்ளது? என்ற விவரங்களை இதுவரை முழுமையாக கணக்கெடுக்க முடியவில்ைலயாம்.

இதற்கிடையே நேற்று ெகாச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது. அப்போது சொப்னா, சரித்குமார், சந்தீப்நாயர் உள்ளிட்டோருக்கு தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா? என்று என்ஐஏ வக்கீலிடம் நீதிபதி கேட்டார்.

இதற்கு பதில் அளித்த என்ஐஏ வக்கீல், தங்கம் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக கடந்த வருடம் ஒரு வழக்கு மூலம் தெரியவந்தது.

தங்கம் கடத்தலில் கிடைத்த பணமும் தீவிரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்? என்ற சந்தேகம் உள்ளது என்றார்.

இதையடுத்து அது தொடர்பான ஆவணங்களை உடனே தாக்கல் செய்யுமாறு நீதிபதி என்ஐஏ வக்கீலிடம் கூறினார்.

.

மூலக்கதை