இந்திய விமான படை 88வது ஆண்டு தினம் ராஜ்நாத் சிங் வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய விமான படை 88வது ஆண்டு தினம் ராஜ்நாத் சிங் வாழ்த்து

புதுடெல்லி: இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினத்தை முன்னிட்டு விமான படை போர் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு விமான படை போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய விமான படை நாட்டின் வான்பகுதியை, எது வந்தபோதிலும், எப்பொழுதும் காக்கும் பணியில் ஈடுபடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நவீனமயப்படுத்துவது மற்றும் உள்நாட்டிலேயே தயாரிப்பது ஆகியவற்றின் வழியே இந்திய விமான படையின் போர் புரியும் திறனை மேம்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

விமான படையின் போர் வீரர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 88 ஆண்டு கால அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் திறமையான செயல்பாடு ஆகியவை இந்திய விமான படை கடந்து வந்த பயணத்திற்கு அடையாளமாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், அமித்ஷா வாழ்த்து
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘எங்கள் விமான வீரர்கள், மற்றும் இந்திய விமான படையின் குடும்பங்களை பெருமையுடன் மதிக்கிறோம்.

நமது வானத்தை பாதுகாப்பதிலும், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடம் நிவாரணத்தில் சிவில் அதிகாரிகளுக்கு உதவுவதிலும் ஐஏஎப் பங்களித்ததற்கு நாடு கடன்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். மற்றொரு வாழ்த்து செய்தியில், ‘ரபேல், அப்பாச்சி மற்றும் சினூக், ஆகியவற்றின் தூண்டுதலுடன் நவீனமயமாக்கல் செயல்முறை ஐஏஎப் இன்னும் வலிமையான மூலோபாய சக்தியாக மாற்றும்.

அடுத்த ஆண்டுகளில் இந்திய விமான படை அதன் உயர்ந்த அர்ப்பணிப்பு மற்றும் திறனை பராமரிக்கும் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘விமான படை தினத்தன்று இந்திய விமான படையின் துணிச்சலான வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் நாட்டின் வானத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமின்றி பேரழிவு காலங்களில் மனிதகுல சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள்.

மா பாரதியை பாதுகாப்பதற்கான உங்கள் தைரியும், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த வாழ்த்து செய்தியில், எங்கள் வானத்தை பாதுகாப்பதில் இருந்து அனைத்து பிரச்னைகளிலும் உதவுவது வரை, எங்கள் துணிச்சலான விமானப்படை வீரர்கள் மிகுந்த தைரியத்துடனும், உறுதியுடனும் தேசத்திற்கு சேவை செய்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

.

மூலக்கதை