தென்காசியில் 2009ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக 3 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

தினகரன்  தினகரன்
தென்காசியில் 2009ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக 3 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

மதுரை: தென்காசியில் 2009ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக 3 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை தீரப்பு வழங்கியுள்ளது. தென்காசியில் கேபிள் டிவியின் ஆப்பரேட்டர் சங்கத் தலைவராக இருந்த முகமது மைதீன்(56) 2009ல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குற்றம்சாட்டப்பட்ட முருகன், தம்புரான்(எ)கிருஷ்ணன், பொன்னையா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஆயுள் தண்டனையை எதிர்த்து 3 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை