இயற்கை விவசாயத்திற்கு மாற உத்தரகண்ட் முடிவு

தினமலர்  தினமலர்
இயற்கை விவசாயத்திற்கு மாற உத்தரகண்ட் முடிவு

டேராடூன்:விவசாய பயிர்களுக்கு ரசாயன உரம் பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம், ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்க உத்தரகண்ட் அரசு சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளது

ரசாயன உரமில்லாத இயற்கை விவசாய்த்திற்கு உத்தரகண்ட் மாநிலம் தயாராகி வருகிறது.


இது குறித்து மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியதாவது: நவீன அறிவியலுடன் இணைந்து பாரம்பரிய அறிவுக்குத் திரும்பிச் செல்வதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம் இதற்காக விவசாய நிலங்களில் ரசாயன பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில்புதிய விவசாய சட்டம் 2019 இயற்றப்பட உள்ளது. மாநிலத்தை 100 சதவீதம் இயற்கையான விவசாயமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.


இதற்காக முதற்கட்டமாக மாநிலத்தில் 8 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் படி இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

சுகாதாரத்திற்கு எதிரான அபாயங்களை குறைப்பதற்கும், நமது மாநில மண்ணின் விவசாய பொருட்களை நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் தெரியப்படுத்த முடியும். இச்சட்டம் வரும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் இயற்றப்படும் என்றார்.

மூலக்கதை