இன்றைய (நவ.,15) பெட்ரோல் விலை அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
இன்றைய (நவ.,15) பெட்ரோல் விலை அதிகரிப்பு

சென்னை: சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையில் இன்று (நவ.,15) 19 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.53காசுகள், டீசல் விலையில் மாற்றமில்லாமல் லிட்டருக்கு ரூ.69.54 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படடு வருகிறது.



விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.53 ஆகவும், டீசல், விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.54 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய தினம் பெட்ரோலின் விலை அதிகரித்த நிலையில் இன்று(நவ.,15 ல் )19 காசுகள் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது

மூலக்கதை