உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த 22 வகை படிவம்! தயாராக இருக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

தினமலர்  தினமலர்
உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த 22 வகை படிவம்! தயாராக இருக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

திருப்பூர்:உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும், 22 வகையான படிவங்களை தயார் நிலையில் வைக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், மாநகராட்சியில் 62 பதவிகள்; ஐந்து நகராட்சிகளில், 125; 16 பேரூராட்சிகளில், 262 என, 448 பதவிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ளன.
ஊரக உள்ளாட்சிகளில், 265 ஊராட்சி தலைவர் மற்றும் 2,295 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், 170 ஒன்றிய கவுன்சிலர், 17 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என, 2,474 பதவிகள் உள்ளன.மாவட்டத்தில் மொத்தம், 3,195 உள்ளாட்சி பதவிகளுக்கு, விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
நகர்ப்புறத்தில், 1,015 ஓட்டுச்சாவடி, ஊரகத்தில், 1,704 ஓட்டுச்சாவடி என, 2,819 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.6,132 ஓட்டுப்பெட்டிஉள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த, 2,687 'கன்ட்ரோல் யூனிட்'களும், 5,400 'பேலட் யூனிட்'களும் கைவசம் உள்ளன. மேலும், 6,132 ஓட்டுப்பெட்டிகளும் உள்ளன.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.ஆலோசனை கூட்டம்கலெக்டர் விஜய கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், பி.டி.ஓ.,க்கள் பங்கேற்றனர். ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும், ஓட்டுப்பதிவு அலுவலர்களை விரைவில் தேர்வு செய்து, 'ஆன்லைனின்' விவரங்களை பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
22 வகையான படிவம்
இத்தேர்தலில், நேரடி நியமனம் கிடையாது; கம்ப்யூட்டரில் பதிவாகும் விவரங்களை கொண்டு, 'ரேண்டம்' முறையில், பணி ஒதுக்கீடு செய்யப்படும். தேர்தலில், ஒன்று முதல், 22 வரையிலான படிவங்கள் பயன்படுத்தப்படும். அதாவது, தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதில் துவங்கி, தேர்வு முடிவுகளை அறிவித்து, வெற்றி வேட்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வரையிலான படிவங்கள் உள்ளன.
தேர்தல் அறிவிப்பு வெளியாக இருப்பதால், அந்தந்த உள்ளாட்சி அளவில், 22 வகையான படிவங்களையும், தேவையான அளவு அச்சிட்டு தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. நகர்ப்புறத்தில், ஓட்டுச்சாவடி ஒன்றுக்கு, நான்கு ஓட்டுப்பதிவு அலுவலர் பணியில் இருப்பர்.19 ஆயிரம் அலுவலர்மாவட்டத்தில், 'ரிசர்வ்' உட்பட, 19 ஆயிரத்துக்கும் அதிகமான, ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.அறிவிப்பு வெளியானதும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.

மூலக்கதை