பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்

தினமலர்  தினமலர்
பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்

புதுடெல்லி: மொபைல் சேவை நிறுவனங்களிடம் இருந்து அனுமதி கட்டண நிலுவை தொகை வசூலிக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கி சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஏர்டெல் ரூ.21,682.13 கோடி, வோடபோன் ரூ.19,823.71 கோடி, ரிலையன்ஸ் ரூ.16,456.47 கோடி, பி.எஸ்.என்.எல். ரூ.2,098.72 கோடி, எம்.டி.என்.எல். ரூ.2,537.48 கோடி என நிலுவைத்தொகை மொத்தம் ரூ.92,641.61 கோடி உள்ளது.


இந்நிலையில் ஏர்டெல், ஐடியா, வோடா போன் ஆகிய நிறுவனங்கள் செப். 30-ம் தேதி முடிய 2-வது காலாண்டில் ரூ.50, 921 கோடி வரை பெருநஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த சமீபத்திய உத்தரவுகள் இந்நிறுவனங்களை கடுமையாகப் பாதிப்பதாக இந்த நிறுவனங்கள் அரசின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை