இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7.1 ரிக்டராக பதிவு

தினகரன்  தினகரன்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7.1 ரிக்டராக பதிவு

ஜகார்ட்டா: இந்தோனேசியாவின் மோலுக்காஸ் தீவு அருகே கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.இதனால் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக மருத்துவமனைகள் முன்பாக மக்கள் குவிந்தனர். அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவானதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மூலக்கதை