வருமான வரி வரம்பு யோசனை கேட்கிறது நிதி அமைச்சகம்

தினகரன்  தினகரன்
வருமான வரி வரம்பு யோசனை கேட்கிறது நிதி அமைச்சகம்

புதுடெல்லி: வருமான வரி மற்றும் இதர வரிகளில் மாற்றம் செய்வது தொடர்பாக கருத்து, பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இதனால், கடந்த பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, பொருளாரத்தை மேம்படுத்தும் வகையில் சில நிதி சீர்திருத்த அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில், அடுத்த பட்ஜெட் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ளது.இதற்காக, நிதி அமைச்சகம் சார்பில் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்கள் நடத்தி, கருத்துக்கள் கேட்கப்படுவது வழக்கும்.  தொழில்துறையினர் வேண்டுகோளுக்கு இணங்க சில அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும். இந்நிலையில், நிதியமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘‘வரி அமைப்புகளில் மாற்றம், நேரடி மற்றும் மறைமுக வரி ஆதாரங்களை பெருக்குவது உள்ளிட்டவை தொடர்பாக தொழில்துறையினர் மற்றும் வர்த்தக அமைப்புகள்  ஆலோசனை கூறலாம்’’ என தெரிவித்துள்ளது. ஏற்கெனவே வரிச்சலுகைகள் சில அறிவிக்கப்பட்டுள்ளதால், இதை கருத்தில் கொண்டு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என நிதியமைச்சக வட்டாரங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

மூலக்கதை