ஐபிஎல்: டெல்லி அணியில் களம் இறங்குகிறார் ரகானே

தினகரன்  தினகரன்
ஐபிஎல்: டெல்லி அணியில் களம் இறங்குகிறார் ரகானே

புது டெல்லி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான அஜிங்கியா ரகானே ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2011 முதல் 2019 வரை 100 ஐபிஎல் போட்டிகளில் 24 போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டனாக இருந்துள்ளார்.அந்த அணிக்காக அதிக ரன்களை குவித்தவரும் இவரே. மொத்தம் 2810 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதமும்,17 அரை சதமும் அடங்கும். கடந்த ஐபிஎல் போட்டியின் போது இடையிலேயே இவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஐபிஎல் அணி வீரர்கள் பரிமாற்றத்தின்  கடைசி நாளான நேற்று ராகானே ராஜஸ்தான் அணியில் இருந்து டெல்லி அணிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக டெல்லி அணியில் இருந்து சுழல் பந்து வீச்சாளர் மாயங்க் மார்க்கண்டே மற்றும் ஆல் ரவுண்டர் ராகுல் திவேதியா ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டனர். இந்த தகவலை ஐபிஎல் நேற்று வெளியிட்டது.

மூலக்கதை