சென்னை துறைமுகத்தில் 60 கோடியில் பல்வேறு திட்டங்கள்

தினகரன்  தினகரன்
சென்னை துறைமுகத்தில் 60 கோடியில் பல்வேறு திட்டங்கள்

சென்னை: சென்னை துறைமுகத்தில் ரூ.60 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள  பல்வேறு திட்டங்களை மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் தொடங்கி வைத்தார்.மத்திய கப்பல் போக்குவரத்து, ரசாயனம்  மற்றும் உரத்துறை இணையமைச்சர்  மன்ஷுக் எல் மண்டாவியா நேற்று சென்னை துறைமுகத்திற்கு வந்தார். அவரை சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் ரவீந்திரன் வரவேற்றார். சென்னை துறைமுகத்தின் எண்ணெய் கசிவு மீட்புத் திறனை அதிகப்படுத்துவதற்காக ரூ.14 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய எண்ணெய் கசிவு மீட்புக்  கப்பல், ரூ.58 கோடியில் இழுவை கப்பல் ஆகியவற்றை துவக்கி வைத்தார். மேலும்   ஆண்டுக்கு 1 மில்லியன் டன் சரக்கு கையாளும் புதிய சரக்கு முனையம், மேல்நிலை சேமிப்புக் கிடங்குகள், சிசிடிவி கேமரா, துறைமுக நுழைவுச் சீட்டு பெற இன்டர்நெட் மூலமாக விண்ணப்பிக்கும் வசதி உள்ளிட்ட திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

மூலக்கதை