கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு?: இலங்கை அரசியல் கட்சி தலைவர்கள் பீதி

தினமலர்  தினமலர்
கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு?: இலங்கை அரசியல் கட்சி தலைவர்கள் பீதி

கொழும்பு: அண்டை நாடான இலங்கையில், நாளை அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கோத்தபயா ராஜபக்சேவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாவதால், அரசியல் கட்சி தலைவர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

இலங்கையில், அதிபர் தேர்தல் நாளை நடக்கஉள்ளது. இதில், 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும், சஜித் பிரேமதாசாவுக்கும், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபயா ராஜபக்சேவுக்கும் இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது. சிங்களர்களின் முழு ஆதரவு உள்ளதால், கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக, இலங்கை பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி வருகின்றன. கோத்தபயா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர். இவர், ராணுவ அமைச்சராக இருந்தபோது, அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், திடீரென மாயமாகினர். அவர்கள், கடத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நாளை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், கோத்தபயாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவலால், எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

மூலக்கதை