உலக பொருளாதார வளர்ச்சியில்'பிரிக்ஸ்'பங்களிப்பு:மோடிபெருமிதம்

தினமலர்  தினமலர்
உலக பொருளாதார வளர்ச்சியில்பிரிக்ஸ்பங்களிப்பு:மோடிபெருமிதம்

பிரேசிலா: 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தென் அமெரிக்க நாடான பிரேசில் சென்றடைந்தார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய, வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் இணைந்து 'பிரிக்ஸ் ' என்ற அமைப்பை உருவாகியது, நாடுகளிடையே பொருளாதாரம் உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.இந்த அமைப்பின், 11வது கூட்டம், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடக்கிறது.


இந்த மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியது, உலகளாவிய பொருளாதார மந்தநிலை இருந்தபோதிலும், பிரிக்ஸ் நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளன, கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளன. உலக பொருளாதார வளர்ச்சியில் பிரிக்ஸ் நாடுகள் 50 சதவீத பங்களிப்பு செய்துள்ளன. பிரேசிலுக்கு சுற்றுலா அல்லது தொழில் துவங்க வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அதிபர் ஜெயிர் போல்சனரோ தெரிவித்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மோடி பேசினார்.

முன்னதாக இப் பயணத்தின்போது, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோநாரோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பிரிக்ஸ் நாட்டு தலைவர்களை சந்தித்தார்.


மூலக்கதை