கட்டமைப்பு! கொடுங்கையூர் குளத்தில் மழை நீரை சேமிக்க...ரூ. 10 லட்சத்தில் பணிகள் நடக்கிறது

தினமலர்  தினமலர்
கட்டமைப்பு! கொடுங்கையூர் குளத்தில் மழை நீரை சேமிக்க...ரூ. 10 லட்சத்தில் பணிகள் நடக்கிறது

கொடுங்கையூர்:மாநகராட்சி குளத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில், மழை நீர் சேகரிப்பு திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

கொடுங்கையூர், யூனியன் கார்பைட் காலனியில், மாநகராட்சிக்கு சொந்தமான, 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளம் உள்ளது. இந்த குளம், 25 அடி ஆழம், 140 அடி அகலம், 175 அடி நீளத்துடன், ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு உடையது. கனமழை பெய்தாலும், இக்குளத்தில் தண்ணீர் நிரம்புவதில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, குளத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழை நீரை, குளத்தில் சேமிக்க வழிவகை செய்ய வேண்டும் என, தண்டையார்பேட்டை மண்டல அதிகாரியிடம், அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

கோரிக்கையை ஏற்று, மாநகராட்சி சார்பில், 10 லட்சம் ரூபாய் செலவில், 100 குடியிருப்புகளை சுற்றியுள்ள சாலைகளில் தேங்கும் மழைநீர், குளத்தில் சென்றடைய, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கும் பணி நடக்கிறது.
இது குறித்து தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி காமராஜ் கூறியதாவது, ''இதுவரை, 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் மழைக்காலத்தில், குளத்தில் எவ்வளவு மழைநீர் தேங்குகிறது என்பது கண்காணிக்கப்படும்,'' என்றார்.

மூலக்கதை