இலங்கை அதிபர் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்வு

தினமலர்  தினமலர்
இலங்கை அதிபர் தேர்தல்: இன்றுடன் பிரசாரம் ஓய்வு

கொழும்பு: வரும் 16 ல் நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்று(நவ.,13) நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு, தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

இலங்கையில் அதிபராக சிறிசேன உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் வரும் 16 ல் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 35 பேர் களத்தில் உள்ளனர். இருப்பினும், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதசாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. கோத்தபய ராஜபக்சே, இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் ஆவார்.


இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி தேர்தல் அறிக்கையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலீடு செய்யப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.


ஆளும் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் சிறப்பு சட்டம் அளிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.



தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ளதால், வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை